இந்தியா

மோசமான என்ஜிஓக்கள் எவை ? தமிழகத்தில் எத்தனை ? - பட்டியல் வெளியீடு

மோசமான என்ஜிஓக்கள் எவை ? தமிழகத்தில் எத்தனை ? - பட்டியல் வெளியீடு

webteam

மத்திய அரசு வெளியிட்ட மோசமான தொண்டு நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 66 தொண்டு நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று அந்த நிதியை தவறாக பயன்படுத்தியதாக ஆயிரம் தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தடை செய்தது. இதன் அடுத்த கட்டமாக அந்த தொண்டு நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தொண்டாற்றும் நிறுவனங்கள் எவை, எந்த நிறுவனங்கள் தொண்டு என்ற பெயரில் முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்பதை அந்தந்தப் பகுதி மக்களால் தெரிந்து கொள்ள முடியும் என மத்திய அரசு கருதுகிறது. 

இந்நிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள மோசமான தொண்டு நிறுவனங்களின் பட்டியலில் மொத்தம் 924 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அதிகபட்சமாக ஒடிசாவில் 289 நிறுவனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 149 தொண்டு நிறுவனங்களும், உத்தரப்பிரதேசத்தில் 78 தொண்டு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் 66 தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நான்காம் இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் மதுரை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் முறைகேடான தொண்டு நிறுவனங்கள் அதிக அளவில் கால் பதித்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் மக்களுக்கு தொண்டாற்றி சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்‌டுள்ளது. அதில் 855 தொண்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலிலும் தமிழகத்திற்க்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது.