இந்தியா

5 மாநில தேர்தலுக்குப் பின் எப்படி மாறியிருக்கிறது இந்திய அரசியல் வரைபடம்?

kaleelrahman

5 மாநில தேர்தலுக்கு பின்பும் பாரதிய ஜனதா நேரடியாக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 12 ஆகவே நீடிக்கிறது. அக்கட்சி உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, அசாம், உத்தராகண்ட், இமாசல பிரதேசம், கோவா, அருணாசல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்கிறது.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க உள்ள நிலையில், பாரதிய ஜனதா ஆதரவுடன் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

பீகார், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியிலும் பாரதிய ஜனதா ஆதரவிலான ஆட்சி அமைய உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆக நீடிக்கிறது. அக்கட்சி ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சி புரிகிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவிலான ஆட்சி நடைபெறுகிறது.

இவை தவிர ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவில் டிஆர்எஸ், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றின் ஆட்சி நடக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ், கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி அமைய உள்ளது.

காஷ்மீரை பொறுத்தவரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. லடாக் சட்டப்பேரவை இல்லாத மத்திய ஆட்சிப் பகுதியாக இயங்கி வருகிறது.