இந்தியா

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன்: ஹர்ஷ்வர்தன்

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன்: ஹர்ஷ்வர்தன்

Veeramani

2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வியாழக்கிழமை "மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில்  கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார். அவர் மேலும் கூறுகையில் "பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு இதனைக் கொண்டிருக்கிறது, எங்களிடம் இதுகுறித்த மேம்பட்ட திட்டமிடல் உள்ளது" என்று கூறினார்