இந்தியா

நேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு!

நேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு!

webteam

நேர்மையாக வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளது.

வருமான வரியை சரியாகச் செலுத்தாமல் பலர் ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் நேர்மையாக பலர் வரி செலுத்தி வருகின்றனர். இந் நிலையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஒழுங்காக வரி செலுத்துவோரின் நேர்மைக்கு தகுந்தபடி அவர்களுக்கு முன்னுரிமை சலுகைகள் வழங்க லாம் என கூறியிருந்தார். 

அதற்கான திட்டம் இப்போது தயாராகி உள்ளது. இதன்படி ஒழுங்காக வரி செலுத்துபவர்க ளுக்கு விமான நிலையம், ரயில் நிலையம், சுங்கச்சாவடிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்கப்படும் என தெரிகிறது.

இது தொடர்பான முடிவை, மத்திய நேரடி வரிகள் வாரிய குழு எடுக்கும். பின்னர் அது மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலு க்கு அனுப்பப்படும். பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக, மத்திய அமைச்சரவை இதுபற்றி முடிவெடுக்கும்