மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அமித்ஷா இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக அமித்ஷாவிற்கு நிலவிவந்த உடல் வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்தபடியே அலுவல் பணிகளை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரிசோதனையில் அமித்ஷாவிற்கு நெகட்டிவ் வந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.