இந்தியா

மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் - மீராகுமார்

மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் - மீராகுமார்

webteam

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் சபாநாயகராக மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார். 

பீகார் மாநிலம் ஆர்ரா மாவட்டத்தில் பிறந்தவர் மீராகுமார். முன்னாள் துணைப்பிரதமர் ஜெகஜூவன் ராம் மகள் 
இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் நாடாளுமன்ற தொகுதியில் 1985 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தலித் சமூகத்தைச் சேர்ந்த மீரா குமார், அந்த தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் மாயாவதி ஆகிய பலம்வாய்ந்த தலைவர்களை வெற்றிகொண்டார். முன்னாள் வழக்கறிஞரான இவர் 5 முறை நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2004-2009) சமூகநலத்துறை அமைச்சராகப் பதவி வகித்த அவர், கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகவும் பணியாற்றினார். 72 வயதான மீராகுமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர்.