இந்தியா

’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை

’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை

Veeramani

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இணைவிமானி அகிலேஷ் குமாரின் மனைவிக்கு, இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது என்று கண்ணீருடன் கூறியுள்ளார் அவரின் உறவினர் பசுதேவ்.

துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமானத் தளத்தில் இறங்கும்போது, இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 180 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்தனர். விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 149 பேர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் உள்ள 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 22 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லேசான காயமடைந்த 22 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உயிரிழந்த விமானிகள் மற்றும் பயணிகள் குறித்த பல்வேறு விஷயங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இணைவிமானி அகிலேஷ் குமாரின் மனைவிக்கு, இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது என்று கண்ணீருடன் கூறியுள்ளார் அவரின் உறவினர் பசுதேவ்.

இதுகுறித்து மேலும் கூறிய பசுதேவ் “ அகிலேஷ் குமார்  மிகவும் பணிவான, கண்ணியமான, நல்ல நடத்தை உடையவர்.  அவரது மனைவிக்கு அடுத்த 15-17 நாட்களில்  குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்  2017 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார், கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு கடைசியாக வீட்டிற்கு வந்திருந்தார்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.