இந்தியா

பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது: இந்து அமைப்பு மிரட்டல்

பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது: இந்து அமைப்பு மிரட்டல்

rajakannan

உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்து மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று இந்து அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாஹினி அமைப்பின் கீழ் செயல்படும் இந்து ஜகரன் மான்ஞ் அமைப்பு இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக WION இணையதள செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக அலிகார் நகரில் உள்ள பள்ளிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து ஜாகரன் மான்ஞ் அமைப்பின் தலைவர் சோனு சவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாணவர்கள் பொம்மைகள், பரிசுப்பொருட்கள் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்க வைக்கிறார்கள். பின்னர் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார். மேலும், “இதுபோன்ற செயல்பாடுகள் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும் பெற்றோர்களிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பேசுவோம்” என்றும் அவர் கூறினார்.