இந்தியா

“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா

“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா

webteam

நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழி இந்தி என்றால் அது மாநில மொழிகளுக்கு மேலானது என்று அர்த்தமில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். 

கடந்த 14ஆம் தேதி நாடு முழுவதும் ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து மடலை வெளியிட்டார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பலமாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழி இந்தி என்று சொன்னால் அது மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை. மும்மொழி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது எல்லா மாநில மொழிகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.