இந்தியா

வாகா எல்லையில் 360 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி

வாகா எல்லையில் 360 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி

webteam

சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லையில் 360 அடி உயரக் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.

நாட்டிலேயே மிக உயரமான கொடி கம்பம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் அமைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக கொடிக்கு சேதம் ஏற்பட்டதை அடுத்து இறக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மீண்டும் அந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.