243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவியது..
நவம்பர் 14-ம் தேதியான நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.. எதிரணியில் நின்ற மகாகத்பந்தன் கூட்டணி 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியை சந்தித்தது..
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலை விட அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன..
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலைவிட நடந்துமுடிந்த தேர்தலில் அதிகரித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, 243 தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் 6.65 லட்சம் வாக்குகள் அதாவது 1.81 விழுக்காடு நோட்டாவிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
2022இல் நடந்த தேர்தலில், 7.06 லட்சம் வாக்காளர்கள் அதாவது 1.68 விழுக்காடு பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். 2015இல் 3.8 கோடி பேரில் 9.4 லட்சம் பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்திருந்தனர்.