சுவேந்து அதிகாரி - ரேவந்த் ரெட்டி web
இந்தியா

தென் மாநில முதல்வர்கள் மீது அதிக குற்ற வழக்குகள்.. 28 மாநிலங்களில் 14 முதல்வர்கள் மீது வழக்குகள்!

இந்தியாவில் 28 மாநிலங்களில் 14 முதல்வர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Rishan Vengai

உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது 89 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகள், கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது தலா 19 வழக்குகள், கேரள முதல்வர் வி. டி. சதீசன் மீது 18 வழக்குகள் உள்ளன. மொத்தம் 28 மாநிலங்களில் 14 முதல்வர்கள் குற்ற வழக்குகளை எதிர்கொள்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகளும், கேரள முதல்வர் வி. டி. சதீசன் மீது 18 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

ரேவந்த் ரெட்டி

தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்களை அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் 58 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக கேரளாவில் 57 சதவீதம், ஆந்திர பிரதேசத்தில் 56 சதவீதம், தெலங்கானாவில் 49 சதவீதம், மற்றும் ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 45 சதவீதம் எம்எல்ஏக்கள் மீது தீவிர வழக்குகள் உள்ளன.

சுவேந்து அதிகாரி

நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, மக்களவையின் மொத்த எம்பிக்களில் 170 பேர் மீதும் மாநிலங்களவையில் உள்ள 75 உறுப்பினர்கள் மீதும் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.