இந்தியா

கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆர்டர்களை குவிக்கும் அதிக வருமானம் ஈட்டும் நாடுகள்

கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆர்டர்களை குவிக்கும் அதிக வருமானம் ஈட்டும் நாடுகள்

EllusamyKarthik

உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய். கடந்த 2019-ஆம் ஆண்டின்  இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் 109 மில்லியன் மக்களை தாக்கியுள்ளது. இதற்கு தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் மருத்தவ துறையை சார்ந்த விஞ்ஞானிகள். 

கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 212 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் 48 மருந்துகள் மூன்றாம் கட்ட சோதனை முயற்சியை எட்டியுள்ளன. சில நாடுகளில் அவசர கால தேவையை உணர்ந்து அந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. 

இந்நிலையில் தற்போது உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளிடம்  போட்டி போட்டுக்கொண்டு ஆர்டர்களை குவித்து வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தரவுகளின் படி பார்த்தால் சுமார் 6.4 பில்லியன் தடுப்பு மருந்துகள் தற்போதுவரை உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆர்டர் குவித்த நாடுகளில் 82 சதவிகிதம் நாடுகள் அதிக வருமானம் ஈட்டும் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளின் பட்டியலின் கீழ் வருகின்றன. 

195 நாடுகளில் 137 நாடுகள் இதுவரை கொரோனா தடுப்புமருந்து கேட்டு ஆர்டர்களை குவித்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்து அனைத்து நாடுகளுக்கும் சமமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்ற குரல்களும் எழுந்துள்ளன.