இந்தியா

ஹெராயின் பறிமுதல் வழக்கு: பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? அமலாக்கத்துறை விசாரணை

kaleelrahman

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த 15ஆம் தேதி குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஆஷி டிரேடிங் நிறுவனம், முகப்பூச்சு பவுடர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தியது தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுதாகர் மற்றும் அவரது மனைவி உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.