இந்தியா

கைகளால் மலம் அள்ளுவதில் உ.பி முதலிடம்: தொடரும் அவலம்

கைகளால் மலம் அள்ளுவதில் உ.பி முதலிடம்: தொடரும் அவலம்

rajakannan

கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஏறத்தாழ 13657 பேர் கைகளால் மலம் அள்ளி வருவதாக அடையாளம் காணப்பபட்டுள்ளது. மக்களவையில் இதுதொடர்பான தகவல்களை மத்திய அரசு தெரிவித்தது.

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11247 பேர் இந்தத் தொழிலில் ஈடுப்பட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக கர்நாடாவில் 738 பேரும், இராஜஸ்தானில் 338 பேரும், தமிழ்நாட்டை பொறுத்தவரை 363 பேரும் உள்ளனர்.

நாடு முழுவதும் 18 மாநிலங்களில் உள்ள 170 மாவட்டங்களில் இதுதொடர்பாக ஆய்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை மொத்தம் 155 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் நிலவரப்படி 13657 பேர் இன்னும் கைகளால் மலம் அள்ளும் தொழிலில்  ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கையால் மலம் அள்ளுவது சட்டப்படி தடை  செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கைகளால் மனிதக் கழிகளை அள்ளுபவர்களின் வாழ்க்கையை புனரமைப்பு செய்வதற்காக மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சுய வேலைவாய்ப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 

முதற்கட்ட உதவியாக ரூ.40 ஆயிரம் ரொக்கத் தொகை வழங்குவது.

குறைவான வட்டிக்கு ரூ15 லட்சம் கடன் வழங்குவது.

ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் இரண்டு ஆண்டுகளுக்கு திறன்மேம்பாடு பயிற்சி அளிப்பது.