இந்தியா

கணினி மூலமாகவே நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்

Rasus

கணினி மூலமாகவே நீட் தேர்வு நடத்தப்படும் என மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. நாடு முழுவதும் இந்த நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. தற்போது வரை நீட் தேர்வை மாணவர்கள் எழுத்துத் தேர்வாகவே எழுதி வருகின்றனர். நீட் தேர்வு கேள்விகள் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டதில் தவறுகள் நடந்ததும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் இனிமேல் கணினி மூலமாகவே நீட் தேர்வு நடத்தப்படும் என மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சத்யாபால் சிங் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுகளை நடத்த கம்பூட்டர் லேப் உள்ள பள்ளி, பொறியியல் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ஆண்டுக்கு 2 முறை நீட், ஜெஇஇ மெயின் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை மூலமாக கணினி மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.