உத்தரகாண்ட் pt
இந்தியா

உத்தரகாண்ட்|விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர்... பரிதாபமாக உயிரிழந்த 5 பேர்!

உத்தரகாசி பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

இந்து. E

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகேவுள்ள கங்கோத்ரி கோயிலுக்கு 6 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் இன்று (8.5.2025) காலை விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரின் விமானியும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பயணிகளில் நான்கு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், இருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து காவல்துறை, இராணுவத்தினர், பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுப்பட்டனர். விமானி உட்பட இதில் 7 பேர் பயணித்தநிலையில், 5 சுற்றுலா பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்பதும் தெரியவந்தது. மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தை உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.

பயணித்தவர்களின் விவரம் ;

மும்பையைச் சேர்ந்த கலா சோனி (61), விஜய ரெட்டி (57), மற்றும் ருச்சி அகர்வால் (56); உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராதா அகர்வால் (79); மற்றும் ஆந்திராவை சேர்ந்த வேதவதி குமாரி (48). குஜராத்தைச் சேர்ந்த விமானி கேப்டன் ராபின் சிங் (60). ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் (51) .

இதுக்குறித்து வினய் சங்கர் பாண்டே தெரிவிக்கையில், “தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது” என்றார்.

இந்நிலையில், உத்திரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த விபத்து குறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தெரிவிக்கையில், “உத்தரகாசி கங்கானி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக துணைப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். விபத்து குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இது தொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் ஒவ்வொரு சூழ்நிலையும் கண்காணிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-