இந்தியா

உ.பி.யில் தொடர்மழையால் தேங்கிய வெள்ளம்: மக்கள் அவதி

உ.பி.யில் தொடர்மழையால் தேங்கிய வெள்ளம்: மக்கள் அவதி

Rasus

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கான்பூர் நகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கி வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அப்பகுதியில் தேங்கிய மழை நீரில் சிறுவர்கள் குதித்து விளையாடினர். தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் முன் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.