இலங்கை  pt
இந்தியா

கோர முகத்தை காட்டிய மழை..வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை நுவரெலியா..மழை நீரில் மிதந்து சென்ற கார்கள்!

விடிய விடிய கொட்டித்தீர்த்த கொடூர மழையால் இலங்கையின் நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகள் தான் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

PT WEB

இலங்கை நுவரெலியாவில் திடிரென ஏற்பட்ட வானிலை மாற்றம் கார­ண­மாக விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. விடாமல் பெய்த கொடூர மழையால் நுவரெலியாவில் கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்ளது.இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தாழ்­வான பகு­திகள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்­கி­யுள்­ளன. நுவரெலியா டு பதுளை செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்­கு­வ­ரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக டெஸ்போட் ,கிளாரண்டன் ,கிரிமிட்டி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.