தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையும் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது