கங்குலி நடித்திருந்த சமையல் எண்ணெய் தொடர்பான விளம்பரப்படம் சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு உள்ளானதல் தற்போது அதன் புரொமோஷன் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை அன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் செய்தனர். சக கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது உடல்நலன் குறித்து அறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் நடித்திருந்த சமையல் எண்ணெய் தொடர்பான விளம்பரப்படம் சமூக வலைதளத்தில் TROLL செய்யப்பட்டதால் தற்போது அதன் புரொமோஷன் நிறுத்தப்பட்டுள்ளது.
கங்குலி, தான் நடித்த சமையல் எண்ணெய் விளம்பரத்தில் இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் எண்ணெய் என புரோமோட் செய்யப்பட்டது. அது குறித்து நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கியவுடன் அதை தயாரித்து விற்பனை செய்யும் அதானி குழுமம் கங்குலியின் புரொமோஷனை நிறுத்திக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னதாக கங்குலில் ஃபேண்டஸி கிரிக்கெட் அப்ளிகேஷன் விளம்பரத்தில் நடித்ததற்காகவும் கேள்விகள் எழுந்திருந்தன. கங்குலி இன்று (5/1/21) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.