இந்தியா

ராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

ராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

Rasus

ராஜஸ்தானில் 22 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் பரவி வந்த ஜிகா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு இருப்பது போன்ற அறிகுறியே ஜிகா வைரஸ் பாதிப்புக்கும் தென்படும். அதாவது காய்ச்சல், தோல்கள் தடித்தல், மயக்கம், அடிக்கடி தலைவலி, மூட்டுகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டால் காணப்படும்.

இதனிடையே ஜிகா வைரஸ் தொற்று காணப்படும் ராஜஸ்தான் மற்றும் ஜெய்ப்பூருக்கு 7 பேர் கொண்ட மத்திய குழு விரைந்துள்ளது. அவர்கள் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையில் மாநில அரசிற்கு உதவும் வகையில் அவர்கள் பணிபுரிந்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி முதல் அவர்கள் ஜிகா தொடர்பான தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கர்ப்பிணி பெண்கள் உற்றுநோக்கி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பயப்படும் சூழல் எதுவும் இல்லை எனவும் மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.