சென்யார் புயல் (மாதிரிப்படம்), கனமழைக்கு வாய்ப்பு வரை pt web
இந்தியா

HEADLINES | சென்யார் புயல் முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை வரை

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், இம்மாத இறுதியில் வங்கக் கடலில் சென்யார் புயல் உருவாக வாய்ப்பு முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, மீண்டும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட விஜய் திட்டம், ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி, காஸா மீது இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்குதல்... உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்...

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்... திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை...

சென்னையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு... வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்...

இம்மாத இறுதியில் வங்கக் கடலில் உருவாகிறதா சென்யார் புயல்?... காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக தகவல்...

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக மழை... திருவாரூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி...

நெல்லையில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... குறுக்குத்துறை கோயில் கல்மண்டபங்களுக்குள் புகுந்த வெள்ளம்....

உச்ச நீதிமன்றம்

மசோதா மீது முடிவெடுக்க ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது... தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என தலைமை நீதிபதி அமர்வு கருத்து...

கால வரம்பின்றி மசோதா மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை... மாநிலத்தில் 2 நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது என்பதையும் தெளிவுப்படுத்திய உச்சநீதிமன்றம்...

உச்ச நீதிமன்றம் கருத்துதான் தெரிவித்துள்ளதே தவிர உத்தரவு பிறப்பிக்கவில்லை.... தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவு அல்ல என திமுக எம்பி வில்சன் பேட்டி...

நெல் ஈரப்பதம் தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு... உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என எக்ஸ் தளத்தில் பதிவு...

அண்ணாமலை

திமுக அரசின் தாமதத்தால்தான் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.... துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்தவே முதல்வர் தகுதியற்றவர் என அண்ணாமலை விமர்சனம்...

திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி... பெருந்தகையும் காங்கிரஸும் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிடுவார்கள் என துணை முதல்வர் உதயநிதி பேச்சு...

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்... சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு....

தமிழகத்தில் 10ஆயிரம் உயர்மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்... ANSR நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு...

அன்புமணி

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிய வேண்டும் என்பதே பாமகவின் விருப்பம்... அமைச்சர் சொன்ன பொய்களை அவரே தகர்த்திருப்பது தங்களுக்கு கிடைத்த வெற்றி என அன்புமணி ராமதாஸ் கருத்து....

கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தவெக தலைவர் விஜய் திட்டம்... டிசம்பர் 4இல் சேலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், காவல் துறை மறுப்பு...

நேற்று முளைத்த காளான் எல்லாம் தமிழ்நாடில் ஆட்சியமைக்க முடியாது... விஜய் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மறைமுக சாடல்..

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை எடுக்கும் வாகனத்தில் உணவு கொண்டு செல்லப்பட்ட விவகாரம்... ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம்...

தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது... ஒரு கிராம் 11ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை...

திருப்பதி திருச்சானூர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம்... கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்தப் பிரசாதம் வழங்கி கவுரவிப்பு...

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா பயணம்... ஜோகன்னஸ்பர்க் நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு...

பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்... பிரதமர் மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்பு...

பிரஷாந்த் கிஷோர்

பிஹார் தேர்தல் தோல்விக்கு பரிகாரமாக நாள் முழுவதும் மவுன விரதம் மேற்கொண்ட பிரஷாந்த் கிஷோர்... 100 ஆண்டுகளுக்கு முன் காந்திஜி நிறுவிய ஆசிரமத்தில் மவுன விரதம்...

ஜம்முவில் செயல்பட்டு வரும் காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்... பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை...

நேபாளத்தில் ஜென் சி தலைமுறையினர் மீண்டும் போராட்டம்... முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆதரவாளர்களுடன் மோதல்...

உக்ரைனுடன் போரிட்டு வரும் ராணுவ வீரர்கள் குழுவை சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்... உக்ரைன் வீரர்களுக்கு சரணடைய போதிய வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சு...

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் குழு சந்திப்பு... ரஷ்யாவுடனான போரை நிறுத்த நீடித்த அனுமதி திட்டத்தை வகுத்து வருவதாக வெள்ளை மாளிகை தகவல்...

பிரேசிலில் நடந்து வரும் காலநிலை மாற்ற மாநாட்டு அரங்கில் பயங்கர தீவிபத்து... முன்னெச்சரிக்கையாக பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு...

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழப்பு... போர்நிறுத்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலால் பாலஸ்தீனியர்கள் கலக்கம்...

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்... பெர்த்தில் நடக்கும் முதல் போட்டிக்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தீவிர பயிற்சி...