இந்தியா

#TopNews கொரோனாவால் முடங்கிய இத்தாலி முதல் எஸ்பிஐயின் அதிரடி அறிவிப்பு வரை..!

#TopNews கொரோனாவால் முடங்கிய இத்தாலி முதல் எஸ்பிஐயின் அதிரடி அறிவிப்பு வரை..!

webteam

கொரோனா வைரஸ், ஒரு பெருந்தொற்று நோய் என அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. சீனாவுக்கு வெளியே, நோயின் பாதிப்பு இரு வாரத்தில் 13 மடங்கு பெருகிவிட்டதாக கவலை

கொரோனா வைரஸ், ஒரு பெருந்தொற்று நோய் என அறிவிக்கப்பட்டதன் எதிரொலி. இத்தாலியில் உணவகங்கள், மருந்துக்கடைகள் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு. வரும் ஏப்ரல் முதல் வீடுகளை கணக்கிடும் பணி தொடங்கும் என அறிவிப்பு

எஸ்பிஐயில் குறைந்தபட்ச இருப்புத்‌தொகையை பராமரிக்க தேவையில்லை‌. ஸ்டேட் பாங்க் இந்தியா தலைவர் ரஜ்னீஷ் குமார் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இனி ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பே இல்லை. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம்

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா. மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்

டெல்லி க‌லவரம் மற்ற பகுதிகளுக்கு பர‌வாமல் தடுத்த காவல்துறையை பாராட்டுவதாக உள்துறை அமைச்சர் அ‌மித் ஷா பேச்சு. ம‌க்களவை விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் ‌விமர்சனத்துக்கு பதில்

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு

மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று மீண்டும் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு

கொரோனா காரணமாக இத்தாலியில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்.உடனடியாக மீட்டு தாயகம்‌ அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை.