தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு. நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரிப்பு.
சென்னையில் ஒரேநாளில் 174 பேர் கொரோனாவால் பாதிப்பு. அரியலூரில் மேலும் 18 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் நாளை முதல் தளர்வுகள் அறிவிப்பு. அத்தியவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
சென்னையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக்கடைகள் இயங்க அனுமதி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
திரையரங்குகள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கு தடை நீடிக்கிறது. திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு செல்வதில் முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றமில்லை.
தொழிற்சாலைகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மே 6 ஆம் தேதி முதல் இயங்கலாம். நோய்த்தொற்று குறைய குறைய மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தகவல்.
திருவாரூர், அரியலூர், கடலூர், தஞ்சை, மாவட்டங்களில் இன்று முழு முடக்கம் அறிவிப்பு. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவில் வெளியே வருவதை தடுக்க நடவடிக்கை.
கொரோனா யுத்த களத்தில் முன் நிற்கும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு முப்படைகளும் இன்று கவுரவம். மருத்துவமனைகள் மீது பூ மாரி பொழியும் ஹெலிகாப்டர்கள். முன்கள வீரர்களுக்கு முப்படை கவுரவம்