முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் காலமானார். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
சுஷ்மா மறைவுக்கு குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சிகளின் தலைவர்கள் இரங்கல். ஒளி மிகுந்த ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனை.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு. மறைந்த தலைவரின் சிலையை சென்னையில் திறந்து வைக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் நிறைவேறியது காஷ்மீர் சீரமைப்பு மசோதா. 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகச் சிறந்த வளர்ச்சியை அடையும் என அமித்ஷா உறுதி
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், புதிய விடியல் பிறந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம். தலைவர்களின் வெற்றிடத்தால் பயங்கரவாதம் தலைதூக்கும் என ராகுல் காந்தி ட்விட்
தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல். தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமென்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தரிசனம் செய்ய இரண்டு நாட்கள் கூட ஆகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி. தீபக் சஹர் ஆட்ட நாயகன் விருதையும் குருணால் பாண்டியா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.