இந்தியா

புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு.. திமுக விருப்பமனு.. சில முக்கியச் செய்திகள்!

webteam

அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பெரும்பான்மை இழந்து சிக்கலில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு. பதவி விலகப் போவதில்லை என முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.

புதுச்சேரியில் அடுத்தடுத்து அரசியல் பரபரப்பு நிலவும் சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம். பொறுப்பை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு.

எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து முதல்வரிடம் விளக்கம் கேட்க காங்கிரஸ் முடிவு. உச்சக்கட்ட அரசியல் குழப்பத்திற்கு நடுவில் புதுச்சேரி வருகிறார் ராகுல் காந்தி.

ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு.மே மாதம் முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் தகவல்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சென்னை - சேலம் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவோம்.சென்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி.

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

சிறு, குறு தொழில்களுக்கான மானியம் ஒன்றரை கோடி ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.அடுத்த 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய தொழில் கொள்கையில் இலக்கு.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறுவது இன்று தொடக்கம்.நான்காம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகர்ஜுன் கார்கேவுக்கு அங்கீகாரம்.சோனியா காந்தி பரிந்துரையை ஏற்று அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவிப்பு.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட்டில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.சுழற்பந்து வீச்சாளர்களின் அதிரடியால் முதல் தோல்விக்கு பதிலடி.

பழம்பெரும் நடிகைக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை 2வது முறையாக போலி ஆவணம் மூலம் விற்ற நபர் கைது. நடிகையின் நிலத்தை 2-ஆம் முறையாக அபகரித்த நபர்