இந்தியா

விவசாயிகள் மறியல் போராட்டம்.. சென்னை டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம் - முக்கியச் செய்திகள்!

விவசாயிகள் மறியல் போராட்டம்.. சென்னை டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம் - முக்கியச் செய்திகள்!

webteam

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று விவசாயிகள் மறியல் போராட்டம். டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் போராட்டம் நடைபெறாது என அறிவிப்பு.

போராடும் விவசாயிகளும், அரசும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கருத்து. 

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடன்கள் ரத்து.16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடிக்கு விவசாயிகள் வரவேற்பு. பிற வங்கிகளில் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரிக்கை

தேர்தல் சுயநலத்துக்காக அதிமுக அரசு விவசாய கடன்களை ரத்து செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. மக்களுக்காக திமுக அறிவிப்பதை அரசு அப்படியே செய்து வருவதாகவும் விமர்சனம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் போக்கை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை. வரும் 9ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிற நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்.


பணி நியமனம் கோரி கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளி பயிற்றுநர்கள் போராட்டம். பகுதி நேர ஆசிரியர்களும் பங்கேற்பதால் போராட்டக் களமான டிபிஐ வளாகம். 9-வது நாளாக போராட்டம்

சென்னை டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம். 100ஆவது டெஸ்டில் 100 ரன்கள் விளாசி கேப்டன் ஜோ ரூட் அசத்தல்.