இந்தியா

கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு.. பரபரக்கும் தமிழக அரசியல்களம்.. முக்கியச் செய்திகள் சில!

webteam

இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்...

அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்தது மத்திய அரசு. பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா மற்றும் சர்வதேச சூழல்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை.

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 4 பேரின் மாதிரிகளில் வேறுபாடு இருப்பது கண்டுபிடிப்பு. மாதிரிகளை இரண்டாம் கட்டப் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் முடிவு.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை இன்று முதல் திறக்க அனுமதி. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் இருக்கைகளுடன் இயங்கும் என அறிவிப்பு.

தமிழகத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 28 பேருக்கு கொரோனா. மீண்டும் முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் கூட்டணி அரசு கிடையாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

முதல்வர் பழனிசாமியுடன் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் சந்திப்பு. அதிமுக உடனான கூட்டணி தொடர்வதாக பேட்டி.

திமுக அளித்த ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் அமைச்சர்கள் மறுத்துள்ளார்களா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

ஆருத்ரா தரிசன விழாவுக்காக சிதம்பரம் நகரம் விழாக்கோலம், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள். முன்பதிவின்றி அனைவரையும் அனுமதிக்க வலியுறுத்தி பக்தர்கள் விடியவிடிய போராட்டம்.

அனைத்து ரக வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அனுமதி. பற்றாக்குறை நீங்கி உள்நாட்டில் விலை குறைந்ததால் நடவடிக்கை.

பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்படைப்பு. நீதிமன்றம் நியமித்த ஆணையர் முன்னிலையில் 7 பீரோக்களில் 160 பொருட்கள் தரப்பட்டன.