இந்தியா

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. இரண்டாவது ஒருநாள் போட்டி.. மேலும் சில முக்கியச் செய்திகள்!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. இரண்டாவது ஒருநாள் போட்டி.. மேலும் சில முக்கியச் செய்திகள்!

webteam

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாகும் என கணிப்பு.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மிக கன மழைக்கு வாய்ப்பு.

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி. அகமதாபாத், ஐதராபாத், புனே ஆகிய இடங்களில் ஆய்வு.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை சொந்த ஊர் செல்லப்போவதில்லை. டெல்லி மற்றும் டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் உறுதி.

வெள்ளம், கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை. மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு.

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வருகிறது 8 பேர் கொண்ட மத்தியக் குழு. செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் ஆய்வு.

சென்னை செம்மஞ்சேரியில் வடியாத மழை நீர். 5 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு.

சிதம்பரம், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு. கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பை அதிகரிக்கவும் வலியுறுத்தல்.

திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை . அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு செய்வார் என தகவல்.

மாமல்லபுரம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலை மீட்பு. கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. தமிழக வீரர் நடராஜன் களமிறங்க வாய்ப்பு.