71-வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு. போராடும் இளைஞர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்
தமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு. டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், மறைந்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் விருதுக்கு தேர்வு
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பேருந்து பயணிகள். அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சுங்கச்சாவடி ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் ஆவேசம்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் பழனிசாமி உறுதி. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை திமுக எதிர்க்கும் என ஸ்டாலின் திட்டவட்டம்
டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது. தமிழகம் முழுவதும் தனிப்படை காவல்துறையினரின் விசாரணை தீவிரம்
கொரனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநில நிர்வாகங்களும் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவு. இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்குமாறு சீனாவிடம் மத்திய அரசு கோரிக்கை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு