ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்தை அறியத் தேவையில்லை என்ற முடிவைக் கைவிட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல். பிரதமருக்கு கடிதம் எழுதி முதலமைச்சர் நாடகம் நடத்தியிருப்பதாக விமர்சனம்
சுகோய் போர் விமான படைப்பிரிவு தஞ்சையில் தொடக்கம். எந்த சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தொடக்கவிழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பேச்சு
40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம். எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை நடத்திய தெலுங்கு தேசம் கட்சியினர் கைது
எதிர்க்கட்சிகள் எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், மத்திய அரசு மீதான மக்களின் நம்பிக்கையை அசைக்க முடியாது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இன்று திமுக செயற்குழுவின் அவசரக்கூட்டம். முக்கிய மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படவிருப்பதாகத் தகவல்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு. புதுடெல்லி தொகுதியிலிருந்து போட்டியிட முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று மனு
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நீடிக்கும் கடுங்குளிர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.