இந்தியா

TopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

webteam

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களின் சம்மதமும் தேவையில்லை என்ற அறிவிப்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு. மத்திய அரசின் முடிவுக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர், விவசாய சங்கங்கள் கடும் கண்டனம்

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்களிடம் கருத்து கேட்கத் தேவையில்லை என்ற உத்தரவுக்கு ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் என கொள்கை முடிவெடுக்கும்படி மாநில அரசுக்கு வலியுறுத்தல்

முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை. நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி. அச்சம் இல்லாமல் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு ஊக்கம் அளிக்கிறார்

சிறார் ஆபாச பட விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை தீவிரமடைகிறது. மாநிலம் முழுவதும் 600 கணினி ஐபிகளின் விவரங்கள் ஆய்வு

குடியுரிமை திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவர மாநிலங்களை மத்திய அரசு நிர்பந்திப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளுநர்களின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் கண்டனம்

மாநில அரசுகள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மறுப்பது அரசமைப்புக்கு புறம்பானது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

கேரள முதல்வர்- ஆளுநர் இடையே கருத்து வேறுபாடு முற்றுகிறது. தனக்கு தெரியாமல் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது குறித்து விளக்கம் கேட்டார் ஆளுநர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்றது இந்தியா