இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்!  

webteam

உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி பெருமிதம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு ராணுவ வீரர் வீர மரணம்

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவு.  கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம்

கோதாவரி - காவிரி இணைப்புத்திட்டம் வைகை, குண்டாறு வரை நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல். தமிழகத்தின் வறண்ட பகுதிகள் பாசன வசதி பெறும் என்றும் அறிவிப்பு

இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு. செப்டம்பர் 30ம் தேதி கெடு முடியவிருந்த நிலையில் நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

10 கோடி ரூபாய் கொடுத்தற்கு ஆதாரம் இருக்கிறதா? -தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நோட்டீஸ்