இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

webteam

சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் முழுமையாக தனியார்மயமாகிறது. ஒப்பந்த பணியாளர்கள் நியமனம்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள். இன்று முதல் அமலுக்கு வந்தது திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை. இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல்

பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் 90 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு. 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில் 73 கிலோ தங்கம், 3 கோடி ரொக்கமும் பறிமுதல்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான முகாம்கள் இன்று முதல் நாடெங்கும் தொடக்கம். மொபைல் ஆப் மூலம் வாக்காளர்களே தங்கள் விவரங்களை திருத்த முடியும்

சுமார் பதினாறரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் ஏற்பாடு

சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளை வைத்திருக்கும் இந்தியர் விவரங்கள் வெளிச்சத்துக்கு வருகிறது. இன்று முதல் தகவல்களை வழங்குகிறது சுவிட்சர்லாந்து அரசு

வங்கிகள் இணைப்பை எதிர்த்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் போராட்டம். வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்புகள் ஏற்படாது என நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமார் உறுதி

அசாமில் குடிமக்கள் பட்டியலில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டதால் பதற்ற நிலை. தகுதியுடையவர்கள் மீண்டும் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்படும் என மத்திய அரசு உறுதி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார பந்துவீச்சு. முதல் இன்னிங்ஸில் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய அணி தடுமாற்றம்