பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அரசின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு. பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது. கைதானவருடன் தொலைபேசியில் பேசியதாக கோவையில் மூவரிடம் தீவிர விசாரணை
மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் சார்பில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை
வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, ஜெட்லி குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ஆறுதல். மதிப்புமிக்க நண்பர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக உருக்கம்
வனப்பகுதியில் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை. கோவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி
காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். ஜனநாயகத்துக்கு விரோதமானது என, டெல்லி திரும்பியபின் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. அரையிறுதியில் சீனா வீராங்கனையை வீழ்த்தினார்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. கோலி, ரஹானே ஆட்டத்தால் வலுவான நிலையில் இந்திய அணி