முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் அதிகாலை 1.00 மணியளவில் உயிர் பிரிந்தது.
இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல். பெருந்தகையை பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்ததாகவும் ஸ்டாலின் உருக்கம்.
பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் இறுதியஞ்சலி. இன்று மாலை வேலங்காடு இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டது. இந்தியாவில் நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. கொரோனா பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்.
நெருக்கடியில் உள்ள யெஸ் வங்கி மறுசீரமைப்பிற்கான வரைவு திட்டத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்கள் கவலை கொள்ளவேண்டாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
டெல்லி வன்முறை குறித்து பாரபட்சமாக செய்தி வெளியிட்டதாக 2 மலையாள டிவி நிறுவனங்கள் மீது நடவடிக்கை. 48 மணி நேரம் ஒளிபரப்புக்கு தடைவிதித்தது மத்திய தகவல் தொடர்புத்துறை.