நவம்பர் 27 காலை தலைப்புச் செய்திகள் pt
இந்தியா

HEADLINES | விஜய் - செங்கோட்டையன் சந்திப்பு முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் காமன்வெல்த் வரை!

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், தமிழக அரசியலில் பேசுபொருளான விஜய்-செங்கோட்டையன் சந்திப்பு முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்..

PT WEB

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னையில் நவம்பர் 29ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு, எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம், எல்லாவற்றையும் தாம்தான் செய்ய வேண்டும் என்றால் முதல்வர் எதற்கு என எடப்பாடி பழனிசாமி கேள்வி, சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக செங்கோட்டையன் ஆலோசனை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம், 2030இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு காமன்வெல்த் சங்கம் ஒப்புதல், அமெரிக்காவில் அதிபர் இல்லாத நேரத்தில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு.. உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை... காவிரிப் படுகை மாவட்டங்களில் கனமழை பெய்யும்...

தஞ்சை, திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழை பெய்யும்... காரைக்காலிலும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு...

சென்னையில் நவம்பர் 29ஆம் தேதி மிக கனமழை பெய்யும்...மேலும் 8 மாவட்டங்களுக்கும் மிககனமழைக்கான எச்சரிக்கை...

மாவட்ட ஆட்சியர்கள், உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார், முதல்வர் மு. க.ஸ்டாலின்... கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தகவல்...

எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்... உண்மையான விவசாயியாக இருந்தால் நெல் ஈரப்பதம் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்க வேண்டியதுதானே என்றும் கேள்வி...

ஈரோட்டில் தன்னைப் பற்றி முதல்வர் புலம்பியிருப்பதாக எடப்பாடி கே. பழனிசாமி சாடல்.... எல்லாவற்றையும் தாம்தான் செய்ய வேண்டும் என்றால் முதல்வர் எதற்கு என கேள்வி...

கனமழை எச்சரிக்கை

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்... சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை...

எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதி.... அமைப்புச் செயலர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல்...

திமுகவிற்கு ரெட் அலர்ட் ஆரம்பம் என தவெக கொள்கை பரப்புச் செயலர் அருண்ராஜ் பேட்டி... நல்ல செய்தி வரும் எனவும் கருத்து...

செங்கோட்டையனின் முடிவுக்கு பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் சந்தேகம்... அதிமுக மற்றும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பின்னடைவு என்றும் கருத்து...

செங்கோட்டையனின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.... நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து...

எஸ்.ஐ.ஆர் மூலம் வடமாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை கொடுத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்... தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு...

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை அருகே வனத் துறையால் பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு... ஓடையில் தண்ணீர் குடிக்க சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக கண்காணிப்பு குழுவினர் தகவல்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்... வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்திலும், வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்....

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தினமும் சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் வருகை.... கடந்த 11 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள்சாமி தரிசனம்...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற புஷ்ப யாகம்... மல்லிகை, தாழம்பூ, முல்லை என 12 வகையான 4 டன் மலர்களை கொண்டு சிறப்பு பூஜை...

2030இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு காமன்வெல்த் சங்கம் ஒப்புதல்.... இந்தியாவுக்கு உலகை வரவேற்க ஆவலுடன் உள்ளோம் என பிரதமர் மோடி மகிழ்ச்சி...

அரசமைப்புச்சட்ட கடமைகளை நிறைவேற்ற மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்... தங்களுக்கு விதிக்கப்பட்டஅரசமைப்புச்சட்ட கடமைகளைநிறைவேற்றினீர்களா என காங்கிரஸ்பதில் கேள்வி...

டிரம்ப், வெள்ளை மாளிகை

ஹாங்காங்கில் 31 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... உயிரிழப்பு எண்ணிக்கை 36ஆக உயர்வு, 279 பேரின் நிலை தெரியாததால் அச்சம்...

சுமத்ரா தீவு அருகே கரையை கடந்தது சென்யார் புயல்...வெள்ளப்பெருக்கு, மண்சரிவால்உருகுலைந்த இந்தோனேசியநகரங்களில் 17 பேர் உயிரிழந்த சோகம்...

தாய்லாந்தை புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்... மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 33 பேர் உயிரிழந்ததாக தகவல்...

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஆக உயர்வு... 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

அமெரிக்காவில் அதிபர் இல்லாத நேரத்தில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு... தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு...

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா முதலிடம்... 4ஆவது இடத்தில் டெல்லியும், 9ஆவது கொல்கத்தாவும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தகவல்...

india batters

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடர் தோல்வியால் தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு நெருக்கடி?... பதவியில் தொடருவது பற்றி பிசிசிஐயே முடிவெடுக்க வேண்டும் என விமர்சனங்களுக்கு பதில்...

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு.. ஒரு சவரன் 94ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை..