நவம்பர் 25 காலை தலைப்புச் செய்திகள் pt
இந்தியா

HEADLINES | வங்கக் கடலில் 3 நாளில் உருவாகும் புயல் முதல் சொந்தமண்ணில் தோல்வியை நோக்கி இந்தியா வரை!

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், வங்கக் கடலில் 3 நாளில் உருவாகும் புயல் முதல் சொந்தமண்ணில் தோல்வியை நோக்கி இந்தியா வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்..

PT WEB

தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு, வங்கக்கடலில் 3 நாட்களில் உருவாகும் புயல், இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை, எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய கூடுதல் அவகாசம் இல்லை, பச்சை துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் விமர்சனம், 1300 கோல்களில் பங்குவகித்த முதல் கால்பந்துவீரராக மெஸ்ஸி சாதனை, அஜித்தின் புதிய பட அறிவிப்பு, சொந்தமண்ணில் தோல்வியை நோக்கி இந்தியா.. உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை... நெல்லை, குமரி மாவட்டங்களில் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு...

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, அருகில் செல்லவோ வேண்டாம்... கரையோர மக்களுக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் எச்சரிக்கை...

தொடர் மழையால் நெல்லை, குமரியில் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு... கடும் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை...

கனமழையால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர்... சாகுபடிக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை...

தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்... நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...

சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்... வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் கணிப்பு...

கனமழை எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில்சூறைக்காற்று வீசும்...5 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தல்...

வங்கக் கடலில் 3 நாட்களில் உருவாகிறது புயல்... வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தகவல்...

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை... தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டம்...

விடுதலைப்புலிகள் வழக்கில் தொடர்புடைய இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை... தேர்தல் ஆணையத்துக்கு அமலாக்கத்துறை புகார் கடிதம்...

பச்சை துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் விமர்சனம்... சுயமரியாதை, உரிமைகளை அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா என்றும் கேள்வி...

திமுக அரசின் கவனக்குறைவு, அலட்சியத்தால்தான் விவசாயிகள் பாதிப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... தாம் எப்போதுமே விவசாயிதான்என்றும் முதல்வரின் விமர்சனத்துக்குபதில்...

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

விருதுநகரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து... கனமழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...

டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய முடிவு எடுக்கவிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு... திருந்தவில்லையெனில் திருத்தப்படுவீர்கள் என தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் ஆவேசம்...

இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக ஒன்றிணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும்... ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் திட்டவட்டம்...

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆஜர்... 10 மணி நேரம் நடந்த சிபிஐ குழு விசாரணை நிறைவு...

தமிழ்நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை... பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்...

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சோகம்... உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு...

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி கோயில் கோபுரத்தில் இன்று காவி கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி... ஸ்ரீராமரின் வீரத்தையும் தெய்வீக மகிமையையும் குறிக்கிறது என பிரதமர் பதிவு...

முதுபெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார்... குடியரசுத் தலைவர், பிரதமர், பாலிவுட் திரையுலகினர் இரங்கல்...

12 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்றிருந்த எத்தியோப்பியாவின் ஹௌலி குப்பி எரிமலை வெடித்து உருவான சாம்பல் மேகம்... வான்பரப்பில் எரிமலைச் சாம்பல் பரவியிருப்பதால் பல விமானங்கள் ரத்து...

மலேசியாவில் தொடரும் கனமழையால், 7 மாகாணங்களை சூழ்ந்துள்ள வெள்ளம்... 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மலேசிய தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தகவல்...

கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த லியோனல் மெஸ்சி... 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்...

மகளிர் கபடி உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி... இறுதிப்போட்டியில் தைவான் அணியை வீழ்த்தி அசத்தல்...

மெஸ்ஸி

கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் 201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது இந்திய அணி... 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 314 ரன்கள் முன்னிலை...

அஜித்தின் புதிய படம் குறித்த தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்... படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் தொடங்கும் என அறிவிப்பு...