நவம்பர் 22 காலை தலைப்புச் செய்திகள் pt
இந்தியா

HEADLINES | தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை to திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்!

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை முதல் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்..

PT WEB

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை, திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய், வங்கக்கடலில் உருவாகும் இரண்டு புயல் சின்னங்கள், உக்ரைன் மீது அதிருப்தி தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பார்வையற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி, நடிகர் அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது.. உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்...

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை... ஈரோடு, கோவை பகுதிகளிலும் பெய்த மழையால் குளுகுளு காலநிலை...

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக நெல்லை, தென்காசியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்... காவிரி படுகை மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை...

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விரைந்த என்.டி.ஆர்.எஃப் குழு... மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு...

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை... குற்றாலம் பிரதான அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு...

கனமழை

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழை... திருத்துறைப்பூண்டியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த மழைநீர்...

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்... வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் கணிப்பு...

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் இரண்டு புயல் சின்னங்கள்... தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என கணிப்பு...

மக்கள் உங்களுக்கு தற்குறிகளா என தவெக தலைவர் விஜய் கேள்வி... தற்குறிகள்தான் உங்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள் என்றும் சூளுரை...

பாலாற்றில் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாக விஜய் குற்றச்சாட்டு... நெசவாளர்கள் 500 ரூபாய் ஊதியத்திற்காக பரிதவிக்கும் நிலையில் உள்ளதாகவும் பேச்சு...

விஜய் பேசுவதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா? என திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி... கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுவதை கண்டு கவலைப்படாதவர் விஜய் என்றும் விமர்சனம்...

நாங்கள் தற்குறி அல்ல; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சையில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்... நெல் ஈரப்பதத்தை தளர்த்துவது தொடர்பான கோரிக்கையை நிராகரித்துள்ளதாக குற்றச்சாட்டு...

டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு... தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கியத்துவமிக்க முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு...

பிஹாரில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட வரலாறு காணாத தோல்வி, தமிழகத்திலும் நிகழும் என அண்ணாமலை விமர்சனம்... 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் பேச்சு...

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புதுச்சேரியில் வழக்குப்பதிவு... தனியார் தொலைக்காட்சி நிருபரை தரக்குறைவாக திட்டிய புகாரில் நடவடிக்கை...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு... ஏஐ தொழில்நுட்பத்திற்கு உலகளாவிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்...

எஸ்ஐஆர் ஒரு சீர்த்திருத்தம் அல்ல, அதுவொரு திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை... மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

கர்நாடகா அதிகார பகிர்வு குறித்து தலைமை முடிவெடுக்கும்... கர்நாடக முதல்வர், அமைச்சரவை மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விளக்கம்...

போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டு வரும் அமெரிக்கா மீது உக்ரைன் அரசுக்கு எந்த நன்றியும் இல்லை... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்...

போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ள திட்டத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்... மறுத்தால் உக்ரைனின் பகுதிகளைகைப்பற்றுவோம் என்றும் எச்சரிக்கை...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்... ஹிஸ்புல்லாவின் தலைமை தளபதி ஹேதம் அலி கொல்லப்பட்டதாக அறிவிப்பு...

பார்வையற்ற மகளிர் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி... இறுதிப் போட்டியில் நேபாளத்தை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி...

india won Blind Women's T20 Cricket World Cup tittle

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி... தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செனூரன் முத்துசாமியின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவிப்பு...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்தது இந்தியா...காயம் காரணமாக சுப்மன் கில் விலகியநிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாகநியமனம்...

நடிகர் அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது... இந்தியாவுக்கும் ரேசிங் சீரிஸ்களை கொண்டுவர அஜித் கோரிக்கை...