rain, sa vs ind captains x page
இந்தியா

HEADLINES | 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் INDvSA 2ஆவது டெஸ்ட் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் வரை விவரிக்கிறது.

Prakash J

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் வரை விவரிக்கிறது.

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப் பெறும் என கணிப்பு...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்... கடலோர பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

பிஹாரில் பதவியேற்ற 26 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு... முக்கியமான துறைகளை 14 பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கினார் முதல்வர் நிதிஷ் குமார்...

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு... முக்கிய விவாதங்களில் பங்கேற்க ஜோகன்னஸ்பர்க் நகரில் குவியும் உலக நாடுகளின் தலைவர்கள்..

ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தத்தை வரும் 27ஆம் தேதிக்குள் ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்கா காலக்கெடு... சாதக, பாதகங்களை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கப்படும் என ஜெலன்ஸ்கி தகவல்...

பவுமா, பண்ட்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலை நியூயார்க் நகர் மேயர் மம்தானி விமர்சனம்...

இத்தாலியில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை... கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்த காவல்துறை...

இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று தொடக்கம்... காயம் காரணமாக சுப்மன் கில் விலகிய நிலையில், இந்திய அணியை வழிநடத்தும் ரிஷப் பண்ட்...

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... ஸ்டார்க், ஸ்டோக்ஸ் வேகத்தில் முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் வீழ்ந்தன...

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி... மலேசியாவில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு...