நவம்பர் 16 காலை தலைப்புச் செய்திகள் pt
இந்தியா

HEADLINES| நீட் விலக்கு: உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு TO தள்ளுவண்டி கடைகளுக்கு உரிமம் கட்டாயம்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் நீட் விலக்கு மசோதாவிற்காக உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு முதல் தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு உரிமம் கட்டாயம் வரை விவரிக்கிறது..

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி... மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை... கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் மிக கனமழை பெய்யும் என கணிப்பு...

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்... வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிப்பு...

நாளை 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்... சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்... கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு...

கனமழை

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு...தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய ஏற்பாடு...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் குறைந்தது... ஒரு கிராம் தங்கம் 11ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை...

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு... ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய்95 காசுகளாக விலை நிர்ணயம்...

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்றவே முடியாது என பிரதமர் மோடி பேச்சு... முன்பு இவிஎம் மீது குற்றம்சாட்டியவர்கள் இப்போது S.I.R.ஐ குறை சொல்வதாகவும் சாடல்...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை... பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்ததாக தகவல்...

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்... துணை முதல்வர் பதவியை பெறுவது குறித்தும் பேசியதாக தகவல்...

பிஹார் தேர்தல் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு

அரசியலில் இருந்து விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு... குடும்பத்தைவிட்டு விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவு...

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...தூய்மை பணியாளர்களுக்குதேவையான உதவிகளை அரசு நிச்சயம்செய்துதரும் என உறுதி...

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்த கொரிய நிறுவனம், ஆந்திராவுக்கு செல்வதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு... வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில்தான் திமுக ஆட்சி இருக்கிறது என விமர்சனம்...

மாநிலத்தின் வளர்ச்சிக்கு கடின உழைப்பை வழங்கும் தொழிலாளர்களை அவமதிப்பது நல்லதல்ல... தொழில் முதலீடு தொடர்பான எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதில்...

நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு... குடியரசுத் தலைவரின் செயல் அரசமைப்புக்கு முரணானது என அறிவிக்க வலியுறுத்தல்...

தமிழகத்தில் 5 கோடியே 90 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்... வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கும் 12 மாநிலங்களில் இதுவரை 95 புள்ளி 44 விழுக்காடு படிவங்கள் விநியோகம்...

எஸ்ஐஆர் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு... தமிழக அரசை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்...

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றன... எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்...

தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை என்ற நிலை வந்தாலும் வரலாம்... வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு...

தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக இன்று ஆர்ப்பாட்டம்... முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் ஆதரவாக இருக்கிறாரா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி...

வாக்காளர் பட்டியல்

ரத்தநாளம் போன்றது ஆறுகள்... அதில் அணை கட்டுவது ஸ்டோக்குக்கு ஒப்பானது... கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து தண்ணீர் மாநாட்டில் சீமான் பேச்சு...

தமிழகத்தில் தள்ளுவண்டி உணவு கடைகள் உரிமம் பெறுவது கட்டாயம்... உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கட்டணமில்லா உரிமம் வழங்கப்படும் என அறிவிப்பு...

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது அருகே இருந்த மெட்ரோ ரயில் நிலையத்திற்குள்ளும் ஏற்பட்ட அதிர்வு... சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியானது...

அமெரிக்காவில் உணவுப்பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் கடும் அவதி... கடும் எதிர்ப்பையடுத்து 200 பொருட்களக்கு இறக்குமதி வரியை ரத்து செய்தார் அதிபர் ட்ரம்ப்...

தயாரிப்பாளராக தனது நடிகருக்கு பிடித்தவர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருப்பதாக கமல்ஹாசன் பேச்சு... ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகிய நிலையில் கருத்து...

jadeja - samson - shami

ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திரஜடேஜாவை வழங்கியது சிஎஸ்கே...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா விடுவிப்பு... ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி திணறல்...

ராஜமௌலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் வாரணாசி... புதிய வீடியோவை வெளியிட்டது படக்குழு...