புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
பிஹாரில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்.டி.ஏ. கூட்டணி... 89 இடங்களில் பாஜகவும், 85தொகுதிகளில் ஜே.டி.யு.வும் வெற்றிபெற்று அசத்தல்...
பிஹார் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணிக்கு கடும் பின்னடைவு... காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி...
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி கைப்பற்றியது... அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் கட்சி...
பிஹாரின் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் போராடி வெற்றி... மகுவா தொகுதியில் லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தோல்வி..
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 6.65 லட்சம் பேர் நோட்டாவிற்கு வாக்களிப்பு.... 2020 தேர்தலைவிட நடப்பு தேர்தலில் பூஜ்ஜியம் புள்ளி 18 விழுக்காடு அதிகரிப்பு...
ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி... காஷ்மீரில் இரண்டு தொகுதிகளில் தலா ஒரு இடங்களில் பாஜகவும், பிடிபி கட்சியும் கைப்பற்றியது...
இண்டியா கூட்டணி முஸ்லிம், யாதவர்கள் (MY) வாக்குகளால் வெல்ல முயன்றார்கள்... பெண்கள், இளைஞர்கள் (MY) வாக்குகளால் பாஜக கூட்டணி வீழ்த்தியதாக பிரதமர் மோடி பேச்சு...
பிஹாரைத் தொடர்ந்து மேற்குவங்கம், தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும்... பிஹாரில் மீண்டும் லாலுவின் ஜங்கிள் ராஜ்ஜியம் ஆட்சியை பிடிக்காது எனவும் விமர்சனம்...
ஆரம்பம் முதலே பிஹார் தேர்தல் நடுநிலையாக நடைபெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திவிமர்சனம்...தேர்தல் முடிவு ஆச்சரியமளிக்கிறதுஎன்றும் கருத்து...
பிஹார் தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என மல்லிஜார்ஜூன் கார்கே அறிவுறுத்தல்... ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் கருத்து...
பிரதமர் மோடி தனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக நிதிஷ் குமார் பதிவு... மிகவும் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் பிஹார் சேர்க்கப்படும் என உறுதி...
பிஹார் தேர்தலில் எஸ்.ஐ.ஆரை பயன்படுத்தி பாஜக பெரிய அளவில் மோசடி செய்து வெற்றி என அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு... எஸ்.ஐ.ஆர். விளையாட்டை மேற்குவங்கம், தமிழகம், உத்தர பிரதேசத்தில் கொண்டு வரமுடியாது எனவும் கருத்து...
எஸ்ஐஆர் நடைமுறையால் மக்களின் வாக்குகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்... எங்கு போனாலும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் பற்றியே பேச்சு என்றும் கருத்து...
எஸ்ஐஆர் படிவத்தில் குழப்பம் இல்லை என எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி... எஸ்ஐஆர் பணியில் திமுக அரசு 4ஆம் வகுப்பு படித்தவர்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு...
பிஹாரை போன்று 2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என நயினார் நாகேந்திரன் பேச்சு... மத்திய அரசு எதை செய்தாலும் முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து கொண்டே இருப்பதாகவும் குற்றச்சாட்டு...
தமிழகத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர்களுக்கு வரலாறு என்பது எதுவும் கிடையாது... தவெக தலைவர் விஜயை மறைமுகமாககுறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின்விமர்சனம்...
மீண்டும் 94 ஆயிரத்துக்கு கீழ் வந்தது ஆபரணத் தங்கத்தின் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்தது...
தமிழகத்தில் நாளை முதல் 18ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
காஷ்மீரில் நெளகாம் காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்த விபத்தில் 8 காவலர்கள் படுகாயம்... ஹரியானாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் வைத்திருந்த போது ஏற்பட்ட சோகம்...
இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் தொடங்கிய முதல் டெஸ்டில் 159 ரன்னுக்கு சுருண்டது தென்னாப்ரிக்கா... 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியஜஸ்பிரித் பும்ரா...
ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக இந்திய அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்ய்வன்ஷி 42 பந்தில் 144 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார்.
17 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, தொடர்ந்து அதிரடி காட்டி 32 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 15 சிச்கர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும்..