புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்... புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீர் மழையால் நிலவிய இதமான காலநிலை...
வரும் 17, 18ஆம் தேதிகளில் காவிரிப் படுகை மாவட்டங்களில் கனமழை பெய்யும்... கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 15ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு... சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தகவல்...
தைவானை நோக்கி ‘ஃபங்-வோங்’ புயல் நகரும் நிலையில், சுமார் 8 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்... யிழனின் (YILAN) மாகாணத்தில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பு...
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சிகள்... குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் வாகனங்கள் நொறுங்கி சிதறிய காட்சிகள் பதிவு...
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது என்ஐஏ... தேடப்பட்டுவந்த சிவப்பு எஸ்யுவி கார் ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறை தகவல்....
டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதல் கொடூரமான பயங்கரவாத செயல்.... சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்கு பிறகு மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு...
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்டுவோம் என மத்திய அரசு உறுதி... நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சரவையில் தீர்மானம்...
டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை நேரில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி... சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதி...
பாஜகவினரும், தேர்தல் ஆணையமும் வெளிப்படையாகவே வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு... நாட்டின் ஜனநாயகம் நேரலையில் கொலை செய்யப்படுவதாகவும் விமர்சனம்...
புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை... உட்கட்சி பூசலை தவிர்த்து, தேர்தலில் வெற்றி பெற அனைவரும் செயலாற்றவேண்டுமென அறிவுறுத்தல்...
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை.... மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்....
செங்கம் அருகே மின்வேலியில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சோகம்... உடல்களை மறைத்த விவசாயியிடம் காவல் துறை விசாரணை....
மெட்ரோ ரயில், மாநகர பேருந்து, மின்சார ரயிலில் ஒருமுறை சலுகை பயணம் செய்யும் புதிய திட்டம்.. ‘சென்னை ஒன்’ செயலியில் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி பயணிக்கும் வசதி இன்று முதல் அறிமுகம்....
தமிழ்நாட்டில் 78 சதவீத எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்... 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 5 கோடி படிவங்கள் விநியோகம்...
12 மாநிலங்களில் 72.66 விழுக்காடு எஸ்.ஐ. ஆர். படிவங்கள் விநியோகம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு... மேற்குவங்கத்தில் 88.8 விழுக்காடும், உத்தர பிரேதத்தில் 69.65 விழுக்காடு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்...
பிஹாரில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் முந்தும் என்டிஏ கூட்டணி... பெரும்பான்மை இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என ஆக்சிஸ் மை இண்டியா தகவல்...
பிஹார் தேர்தலில் இண்டியா கூட்டணி வெல்வது உறுதி என முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேச்சு... பாஜக தலைமை அறிவுறுத்தல்படியே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து...
பிஹார் தேர்தலில் பெண் வாக்காளர்கள் ஆதரவு தங்கள் கூட்டணிக்கே கிடைத்துள்ளதாக பாஜக கருத்து... கடந்த 11 ஆண்டுகளில் மாநிலங்களில் ஆளுங்கட்சி வெல்வது வழக்கமாகி வருவதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பதிவு...
டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசு... அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நுரையீரல் சார்ந்த பிரத்யேக கிளினிக்குகளை அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்...
தென் அமெரிக்க நாடான பெருவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து... 37 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது... தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 600க்கு விற்பனை...
பாகிஸ்தானில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை அணி வீரர்கள் உயிருக்கு பாதுக்காப்பில்லை என்றும், இலங்கைக்கு திரும்பிவர விரும்புவதாகவும் இலங்கை வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்..
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த பயங்கர தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 கொல்லப்பட்டனர், 27 பேர் படுகாயமடைந்தனர். போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானம் மிக அருகில் இருப்பதால் 8 இலங்கை வீரர்கள் உயிருக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என நாடு திரும்ப கோரிக்கை வைத்துள்ளனர்..
இலங்கை வீரர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் நிர்வாகத்திடம் பேசியிருக்கும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க உத்திரவாதம் கொடுக்கப்பட்டதால் தொடரை முடித்துவிட்டு வருமாறு வீரர்களை அறிவுறுத்தியுள்ளது..