தவெக விஜய் - ஜடேஜா pt
இந்தியா

HEADLINES | விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் மறைமுக விமர்சனம் முதல் உறுதியான ஜடேஜா டிரேட் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் மறைமுக விமர்சனம் முதல் கிட்டத்தட்ட உறுதியான ஜடேஜா டிரேட் வரை விவரிக்கிறது..

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்...தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவுதொடங்கும்...

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை... சென்னையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

தென்காசி அருகே கனமழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்... நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளாதால், உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை...

பிஹாரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான இறுதி நாளில் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்ட அமித் ஷா, ராகுல் காந்தி... நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்...

ஊடுருவல்காரர்களுக்கு உதவ இந்தியா கூட்டணி முயற்சி... பிஹார் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு...

பிஹார் தேர்தல் ஏன் முக்கியம்

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எங்கு சென்றாலும் சிக்குவார்கள் என ராகுல் காந்தி பேச்சு... வாக்குத்திருட்டை தடுத்தால் பிஹாரில் இந்தியா கூட்டணி நிச்சய வெற்றி என்றும் உறுதி...

ஆர்.எஸ்.எஸ்.இல் தனிப்பட்ட ஜாதி, மத அடையாளங்களுடன் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை... யார் வேண்டுமானாலும் சங்கத்திற்கு வரலாம் என மோகன் பகவத் கருத்து...

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் தெருநாய்கள் தாக்கியதில் 8 பேர் படுகாயம்... அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்சினையில் இருந்து தீர்வு எப்போது என பொதுமக்கள் கேள்வி...

சென்னையில் 7 இடங்களில் செல்லப் பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம்... 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டதாக மாநகராட்சி விளக்கம்...

எஸ்ஐஆர் என்பது இடியாப்ப சிக்கல்; முதல் கோணல், முற்றிலும் கோணல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்... தமிழ்நாட்டை எஸ்ஐஆர் ஆபத்து சூழ்ந்துள்ளதால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி உள்ளதாகவும் குற்றச்சாட்டு...

தெருநாய்கள் விவகாரம்

திமுக ஆட்சியில் காவல் துறை தனது கம்பீரத்தை இழந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு... மத்திய தேர்வாணைய விதிகளின்படி டிஜிபியை உடனடியாக நியமிக்கவும் வலியுறுத்தல்...

அடித்தளமே இன்றி சிலர் அரசியலுக்கு வர முயற்சிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்... கைத்தட்டி, விசிலடித்து கூடி கலையும் கூட்டமல்ல இது எனவும் பேச்சு...

திமுக ஆட்சி மீது மக்களிடம் கோபம் அலைபாய்கிறது; அது தேர்தலில் சுனாமியாக மாறும்... தருமபுரியில் நடைபெற்ற மக்கள் உரிமை நடைபயண நிறைவு விழாவில் அன்புமணி பேச்சு...

கோவாவில் நடைபெற்ற சர்வதேச உடற்பயிற்சி நிகழ்வுகளில் அண்ணாமலை, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பங்கேற்பு... நாட்டின் இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வு என பிரதமர் மோடி பாராட்டு...

நகைகளை விற்று அதிமுகவை வலுப்படுத்தியவர் ஜெயலலிதா என செங்கோட்டையன் பேட்டி... மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மன்னிக்கும் குணம்இருந்ததாகவும் பெருமிதம்...

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருவதாக எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... திமுக ஆட்சியில் மற்ற துறைகளைவிட, நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக விமர்சனம்...

மத்திய அரசு ஒதுக்கீட்டின்படி ரேஷன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்... உண்மை புரியாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அரசியல் செய்ய வேண்டாம் எனவும் பதில்...

கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2ஆவது நாளாக ஆஜரான தவெக நிர்வாகிகளிடம் 7 மணி நேரம் விசாரணை... விஜய் பரப்புரை வாகன சிசிடிவி காட்சிகள், முக்கிய ஆவணங்கள் சிபிஐயிடம் சமர்பித்து விளக்கம்...

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் போராட்டம்... அரசு உரிய விதிகளை உருவாக்க வலியுறுத்தி போராடியவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது காவல்துறை...

அமைதியான போராட்டம் அடிப்படை உரிமை என ராகுல் காந்தி பதிவு... காற்று மாசுபாட்டைத் தடுக்க உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தல்...

fung wong storm Philippines

இந்திய விமானப்படையின் 93ஆவது ஆண்டு தினம் கொண்டாட்டம்... அசாம் மாநிலம் கவுஹாத்தியில் கண்கவர் வான் சாகசங்கள்...

பிலிப்பைன்ஸில் உருவாகியுள்ள புதிய புயலால் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பு... லூசன் தீவில் மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது...

அமெரிக்க குடிமக்களுக்கு தலா 2,000 டாலர் வழங்கப்படுமென அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு... வெளிநாட்டு வரி வருவாயை மக்களுக்கே திருப்புவதாக விளக்கம்...

சென்னையில் நடைபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் வாக்குவாதம்... தீர்மானங்களை வாசித்தபோது உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு...

கமல்ஹாசன் - ரஜினிகாந்த் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் புதிய படம்... சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில் வீடியோ வெளியிட்ட ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம்...

Ravindra Jadeja

2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மிகப்பெரிய டிரேடிங்கில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது.. தற்போது சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சென்னையிலிருந்து ஜடேஜா மற்றும் சாம் கரனை விடுவிக்க சிஎஸ்கே முடிவெடுத்துள்ளதாகவும், 2 அணிகளும் சம்பந்தப்பட்ட வீரர்களிடம் பேசியுள்ளதாகவும் கிறிக்இன்ஃபோ அறிக்கை வெளியிட்டுள்ளது..