மார்ச் 2 காலைத் தலைப்புச் செய்திகள் web
இந்தியா

Headlines| ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தொடர் தாக்குதல் to சஞ்சு அதிரடியால் அரையிறுதி சென்ற இந்தியா!

இன்றைய புதிய தலைமுறையின் காலைத் தலைப்புச் செய்திகளானது ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தொடர் தாக்குதல் முதல் சஞ்சு சாம்சன் அதிரடியால் அரையிறுதி சென்ற இந்தியா வரை விவரிக்கிறது.

PT WEB

டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து தாக்கி வரும் ஈரான் படைகள்... தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த நிலையில் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதி...

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் பதிலடி... உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்...

அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல்... நான்கு அதிநவீன ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக அறிவிப்பு...

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள ராணுவ நடவடிக்கை... மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் பலத்தகாயமடைந்ததாகவும் அமெரிக்காதகவல்...

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர்... பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்...

அமெரிக்கா - ஈரான்

தங்களது நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்... நண்பர்களுக்குள் மோதல் வேண்டாம் எனவும் எச்சரிக்கை...

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு... வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஆலோசனை...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம்... போர் நிறுத்தம் அவசியம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் வலியுறுத்தல்...

ஈரானின் உச்ச தலைவர் காமேனியைப் படுகொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ பல மாதங்களாக திட்டம்... காமேனியின் நடமாட்டங்களை தீவிரமாக கண்காணித்து தாக்குதல்...

காமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரானின் இடைக்காலத் தலைவராக அலிரேசா அராஃபி நியமனம்... காமேனியின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக அறியப்படுபவர்...

காமேனி மரணத்தை அடுத்து பிளவுபட்டிருக்கும் ஈரானிய சமூகம்... ஒரு தரப்பினர் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கொந்தளிக்கும் நிலையில் மறுதரப்பினர் ஜனநாயகம் மலரும் என மகிழ்ச்சி...

ஈரான் மீது சேர்ந்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

கடந்த 1981இல் ஒரு சாதாரண மதகுருவாக இந்தியாவுக்குப் பயணம் செய்த காமேனி... பெங்களூரு, காஷ்மீருக்கு வந்து பல்வேறுநிகழ்வுகளில் பங்கெடுத்ததாக தகவல்...

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வான்வெளி கட்டுப்பாடுகள்... நேற்று மட்டும் 350க்கும் மேற்பட்ட இந்திய விமானங்கள் ரத்து...

லண்டன், நியூயார்க் உள்ளிட்ட சில மேற்கத்திய நகரங்களுக்கான விமான சேவை இன்று ரத்து... ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் முடிவு...

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை... காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கண்டனம்...

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்புகள்... ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கம்...

காமேனி கொலையை கண்டித்து பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடிய கும்பல்... பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 9 பேர் உயிரிழப்பு...

ஈரான் போராட்டம்

வளைகுடா போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 7 மாதங்களில் இல்லாத உயர்வு... 17 நாட்களுக்கு தேவையான எண்ணெய் இருப்பதால் உடனடி பாதிப்பு இல்லை என மத்திய அரசு விளக்கம்...

ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து தங்கம் விலை உயர்வு... சவரனுக்கு ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 26ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை...

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்தது... ஒரு கிராம் வெள்ளி விலை 325 ரூபாயாக உயர்ந்தது....

தமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வு இன்று தொடக்கம்... 8.27 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத 3 ஆயிரத்து 412 மையங்களில் ஏற்பாடு...

மதுரையில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி... புதிய சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்...

பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு... இரண்டு புல்லட் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு...

மோடி

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமிதரிசனம்... கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்குபூரண கும்ப மரியாதை...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி... திமுக என்ன செய்தாலும், வாய்மையே இறுதியில் வெல்லும் எனவும் சூளுரை...

தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தான் என பிரதமர் மோடி மீண்டும் உறுதி... திமுக மாஃபியா அரசியல் செய்வதாகவும், மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு பலிக்காது எனவும் கருத்து...

தமிழ்நாட்டிற்கு திமுக நல்லது செய்யாது... நல்லது செய்யவும் விடாது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு... பணம் நமக்கு, பிரச்சினை மக்களுக்கு என்பதே திமுகவின் மாடல் எனவும் விமர்சனம்...

திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக விமர்சித்த பிரதமர் மோடி... திமுக அமைச்சர்கள் மக்களிடம் இருந்து திருடுவதாகவும் குற்றச்சாட்டு...

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் உரிமை பற்றி தற்போது பேசுபவர்கள், மத்தியில் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள் என பிரதமர் மோடி கேள்வி... திமுகவும், காங்கிரசும் வாய்க் கிழிய பேச மட்டுமே செய்வார்கள் எனவும் விமர்சனம்...

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி பேச்சு... தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் எனவும் திட்டவட்டம்...

வரும் சட்டமன்றத் தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான தேர்தல் என நயினார் நாகேந்திரன் பேச்சு... தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதாக அன்புமணி குற்றச்சாட்டு... தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனவும் பேச்சு...

தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் தெருவில் இறங்கி போராடும் நிலை உள்ளதாக டிடிவி தினகரன் சாடல்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்புஇல்லை எனவும் விமர்சனம்...

திமுக அரசை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்

மதுரையில் பிரதமர் மோடியின் வருகைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு... கருப்புக் கொடியுடன் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல் துறை...

மதுரையில் விரகனூர்-விமான நிலையம் வரையிலான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்... என்.டி.ஏ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திரும்பியதால் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்ற வாகனங்கள்...

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு குளறுபடிகள்... திமுக அரசு, தமிழக காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என பியூஸ் கோயல் குற்றச்சாட்டு...

தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி... திமுகவில் சேர்ந்த பிறகு முதன்முறையாக விமர்சித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...

மதுரையில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை... என்.டி.ஏ. கூட்டணி கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்பு...

கிரிஷ் சோடங்கர்

திமுக தங்களுக்கு ஒதுக்க முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது... தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்...

தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தும் திமுக தலைமை... மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் பிற்பகலில் நடக்கும் என தகவல்...

பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி... பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்...

நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு... தமிழினத்தின் லட்சியப் பயணத்தில் கால்கள் பாதை மாறக்கூடாது என்றும் அறிவுறுத்தல்...

சென்னையில் வரும் 4ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு... சட்டமன்றத் தேர்தல் பணிகள், தொகுதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டுமென தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்... திமுகவை வீழ்த்தும் சக்தி விஜயிடம் இருப்பதாக செங்கோட்டையன் பேச்சு...

விஜய் - செங்கோட்டையன்

புதுச்சேரியில் ஆயிரத்து 142 கோடி ரூபாய் மதிப்பிலான 19 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி... ஆயிரத்து 571 கோடி ரூபாயில்செயல்படுத்தப்படும் 74 புதியதிட்டங்களுக்கும் அடிக்கல்...

முந்தைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசால் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி விமர்சனம்... புதுச்சேரியை டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்துக்கான ஏடிஎம் ஆக காங்கிரஸ் பயன்படுத்தி வந்ததாகவும் சாடல்...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... பிரதமர் மோடியிடம் மேடையிலேயே கோரிக்கை வைத்த முதல்வர் ரங்கசாமி...

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மாசித் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு... தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில்நடந்த தேரோட்டத்தில் திரளானபக்தர்கள் பங்கேற்று தரிசனம்...

தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவிப்பு

மழை

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா... சூப்பர் 8 சுற்றின் கடைசிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபாரம்...

இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் உள்ளே வெளியே என இருந்த சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்கள் அடித்து தன் திறமையை நிரூபித்தார்.

ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக சென்னை வந்த மகேந்திர சிங் தோனி... ஜெயிலர் தீம் மியூசிக்குடன் கூலி பட காட்சிகளை ரி-கிரியேட் செய்து வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்...