தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவிப்பு... புதுச்சேரியிலும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாட்டம்...
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்... மறுமார்க்கத்தில் ஞாயிறன்று கன்னியாகுமரியில் இருந்து ரயில் இயக்கப்படுமென அறிவிப்பு...
தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என கணிப்பு... சென்னையில் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு...
மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக மழை... அரியலூர், திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் பெய்த ஆலங்கட்டி மழையால் தணிந்த வெப்பம்...
சூறைக்காற்றுடன் பெய்த மழையால், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேரோடு சரிந்த மூன்று மரங்கள்... வாகன நிறுத்துமிட மேற்கூரை, இருசக்கர வாகனங்கள் சேதம்...
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே செல்ல வேண்டாம்... தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்...
பெண்கள் பாதுகாப்பு, கல்வி முறை குறித்து விழுப்புரத்தில் வாக்காளர்கள் இடையே காரசார விவாதம்... திருவண்ணாமலைக்கு ரயில் சேவை உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ள விழுப்புரம் மக்கள்...
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 20 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வருகை... தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்...
அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியம், போக்குவரத்து காவலர்களுக்கு தபால் வாக்களிக்கும் உரிமை... சிறைத்துறை, தீயணைப்புத் துறையினரும் தபாலில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரகண்காணிப்பு...வாகனங்களில் ஆவணங்களின்றிகொண்டு செல்லப்படும் பணம், நகை.பொருட்கள் பறிமுதல்...
திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்... தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு இன்று அழைப்பு...
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிகள் குறித்து ஆலோசனை... மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்துப் பேசிய தொல்.திருமாவளவன்...
தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை... 2 தொகுதிகள் வழங்கப்படலாம் என தகவல்...
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கேட்டுக்கொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலர் அருணாச்சலம் பேட்டி... டார்ச் லைட் சின்னத்தில்போட்டியிடுவதில் உறுதியாகஉள்ளதாகவும் பதில்...
கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று நடக்கிறது மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்... திமுகவிடம் 6 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம், தனிச்சின்னத்தில் போட்டியிடவும் விருப்பம்...
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு... தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை...
எடப்பாடி கே.பழனிசாமியை தொடர்ந்து டெல்லி செல்லும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள்... நயினார் நாகேந்திரன், அன்புமணி, டிடிவி.தினகரன் ஆகியோர் இன்று அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாக தகவல்...
அதிமுக விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்பதில் எந்த தவறும் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து.... தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எந்தவித சிக்கலும் இல்லை என்று விளக்கம்..
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக திட்டம் என தகவல்... தொகுதிப்பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் இழுபறி நீடிக்கும் நிலையில் முக்கிய தலைவர்கள் அவசர ஆலோசனை...
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்... பாஜக பேச்சுவார்த்தைக் குழுவை சந்திக்காமல் திருச்செந்தூர் சென்ற நிலையில் பேட்டி...
கூடலூர் ஊசிமலை பள்ளத்தாக்கில் விழுந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு... செல்ஃபி எடுக்கும் போது தவறிவிழுந்தவரை மீட்ட தீயணைப்புத்துறை மற்றும் ராணுவ வீரர்கள்...
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்... சாயல்குடியைச் சேர்ந்த நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை...
கொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவியின் உடலை பெற குடும்பத்தினர் சம்மதம்... வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முடிவு...
98 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அறிவியல்பூர்வமாக குற்றவாளியை கண்டுபிடித்தோம்... தூத்துக்குடியில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் மதன் விளக்கம்...
சென்னை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பதற்றம்... மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள்...
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வரும் 25ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்... தமிழகத்திற்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் விடுவிக்க வேண்டிய நீரின் அளவு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு...
அரசமைப்பு மரபுகளை தேர்தல் ஆணையம் மீறிவிட்டதாக மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்... மேற்குவங்கத்தில் அரசு அதிகாரிகள்இடமாற்ற விவகாரத்தை சுட்டிக்காட்டிதலைமை தேர்தல் ஆணையருக்குகடிதம்...
கேரளத்தில் 37 தொகுதிகளுக்கான இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்... திருவனந்தபுரத்தில் தீபக் ஜாயும், கண்ணூரில் வழக்கறிஞர் மோகனுக்கும் போட்டியிட வாய்ப்பு...
அசாம் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... 22 வேட்பாளர்களில் 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நீடிக்கும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கௌ முடக்கம்... பிரசித்தி பெற்ற முகல் சாலையில் பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட கார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு...
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்... நகரை குளிர்வித்த மழையை கண்டுரசித்த பொதுமக்கள்...
ஒரே நாளில் இரண்டாவது முறையாக சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு ஐந்தாயிரத்து 360 ரூபாய் வீழ்ச்சி...
வெள்ளி விலை கிலோவுக்கு 10ஆயிரம் ரூபாய் சரிவு... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி கடந்தஇரண்டு நாட்களில் 15 ரூபாய் குறைந்து265 ரூபாய்க்கு விற்பனை...
மேற்காசிய போர் தொடர்பாக பிரான்ஸ், மலேசியா, ஓமன் நாட்டின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை... ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக இயங்குவது குறித்து கலந்துரையாடல்...
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பிரதமர் மோடி உரையாடல்... மேற்காசிய போர் பதற்றம், பிராந்திய அமைதி தொடர்பாக இருவரும் ஆலோசனை...
மேற்காசியாவில் உள்ள எரிசக்தி மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்க முடியாதவை... உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியா கவலை...
சிலிண்டர் எரிவாயு இணைப்பில் இருந்து குழாய் எரிவாயு இணைப்புக்கு மாற முன்வர வேண்டும்... பொதுமக்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேண்டுகோள்...
இஸ்ரேலின் ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்.... கரும்புகையுடன் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கால் நீடிக்கும் பதற்றம்...
கத்தார் மற்றும் ஈரானில் இரு முக்கிய எரிசக்தி மையங்கள் மீது நடைபெற்றதாக்குதல்கள் எதிரொலி...கச்சா எண்ணெய் விலை 113 டாலரைதாண்டியது...
தாக்குதல்களை உடனே நிறுத்தி ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தை கைவிட ஈரானுக்கு வலியுறுத்தல்... 12 அரபு, இஸ்லாமிய நாடுகள் ஆலோசனைக்கு பின் கூட்டறிக்கை வெளியீடு...
ஈரான் கடற்படை இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்... ஹோர்முஸ் நீரிணை அருகே நடந்த தாக்குதல் குறித்த வீடியோ வெளியீடு...
அமெரிக்காவைத் தொடர்ந்து ஈரான் கடற்படையை குறிவைத்த இஸ்ரேல்... காஸ்பியன் கடல்பகுதியில் இருந்த ஈரானின் கப்பல்களை தாக்கி அழித்த காட்சிகள் வெளியீடு...
வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது ராக்கெட் மூலம் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல்... கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடைந்ததாக தகவல்...
ஈரான் தேசிய பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு சீனா கண்டனம்... சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என்றும், எவ்வகையிலும் ஏற்க முடியாது என்றும் கருத்து...
இங்கிலாந்தில் வேகமாக பரவும் மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்...
ஆப்ரிக்க நாடாக மலாவியில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு... வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகள், உடமைகளை இழந்து தவிக்கும் மக்கள்...
2027 பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குள் நுழைந்தது வடகொரிய அணி... பலம்வாய்ந்த தைவானை 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி...
புதுப்பேட்டை இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்... கதையை எழுதி முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவு...