தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மழை தொடரும்... 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...’
கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை.. தேனி சுற்றுவட்டாரத்தில் இரண்டாவது நாளாக பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி...
சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை... புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்...
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை... மின் தடை காரணமாக இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்...
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக தொடரும் மழை... மேலூர் அருகே கொள்முதல் நிலையத்தில் குவிந்துள்ள நெல் மூட்டைகள் நனைவதால் விவசாயிகள் வேதனை...
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 42 கோடியே 65 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்... 2 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...
திமுகவில் மூன்றாவது நாளாக தொடரும் வேட்பாளர் நேர்காணல்... கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு இன்று அழைப்பு...
அதிமுக என்ற கட்சியே தற்போது இல்லை... இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராவார் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி...
2026 சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து..
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து சிபிஎம் மாநில நிர்வாக குழு ஆலோசனை... 5 தொகுதிகளை ஏற்பதா, வேறு முடிவுஎடுப்பதா என விவாதம்...
தொகுதிகளைக் குறைக்குமாறு திமுக கூறவில்லை என பிரேமலதா விளக்கம்... விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்குப் பிறகு பேட்டி...
தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு... சட்டமன்றத் தேர்தல் பணிகள், தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படுமென தகவல்...
இன்று சென்னை வருகிறார் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல்... எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திட்டம் என தகவல்...
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி... இஸ்லாமிய மக்களுடன் நோன்பு திறந்த விஜய்...
கூட்டணி பற்றிய தகவல்கள் அனைத்தும் பொய் பிரச்சாரம் என முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்... தவெக தலைமையிலேயே ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டம்...
மதச்சார்பற்ற கொள்கையில் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்... அவதூறுப் பேச்சுகளை நம்ப வேண்டாம் என்றும் விஜய் வேண்டுகோள்...
தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர் ஆலோசனை... யாருடன் கூட்டணி என இன்னும் 2 நாள்களில் ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி பேட்டி...
புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக இடையே முடிவுக்கு வராத தொகுதி உடன்பாடு... 3 தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் காங்கிரசும் வேட்புமனு தாக்கல் செய்ததால் சலசலப்பு...
சென்னையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது படுகாயமடைந்தவர் உயிரிழப்பு... ரயில் முன் பாய்ந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சோகம்...
தமிழக எம்.பிக்களுக்கு இந்தியில் கடிதம் எழுதிய மக்களவை சபாநாயகர் அலுவலகம்... முகவரியும் இந்தியில் எழுதப்பட்டிருந்ததாக மதிமுக எம்பி துரை வைகோ கண்டனம்...
மே 20ஆம் தேதி முதல் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் சேவை... திருவாரூர், நாகை வழியாக சென்ற ரயில், இனி காரைக்கால், பேரளம் வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...
விழுப்புரம் மேல்மலையனூர் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி நடந்த ஊஞ்சல் உற்சவம்... கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் சூடம் ஏற்றி சாமி தரிசனம்...
கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலம்... கோயிலை வலம் வந்து நமஸ்கார நிகழ்வில் ஆயிரக்கணக்கான தரிசனம்...
தூத்துக்குடி அருகே 12ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரம்... குற்றவாளியை கைது செய்தால் உடலை வாங்க தயார் என, தந்தை பேட்டி...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே சந்திப்பு அருகே பற்றி எரிந்த கருவேல மரங்கள்... கடும் புகைமூட்டம் சூழ்ந்ததால் மக்கள் அவதி...
அடுத்த பருவமழை தொடங்குவதற்கு முன்பே சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்... தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு...
தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 16ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை... கடந்த ஒரு வாரத்தில் தங்கம் சவரனுக்கு 4ஆயிரத்து 400 ரூபாய் சரிவு...
தொடர் சரிவில் வெள்ளியின் விலை... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கு விற்பனை...
81 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தடைந்தது ஜக் லாட்கி என்ற கப்பல்... வளைகுடா பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வருகை...
சீனா நோக்கி சென்ற ஏழு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் இந்தியாவிற்கு திருப்பம்... வரும் 21ஆம் தேதி மங்களூரு துறைமுகம் வருமென தகவல்...
மேற்காசிய போர் பதற்றம் தொடர்பாக குவைத் இளவரசர் ஷேக் சபா காலித்துடன் பிரதமர் மோடி உரையாடல்... ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்...
ஈரானின் பாதுகாப்புத் துறை செயலர் அலி லாரிஜனி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழப்பு... இந்தியாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பதால், பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தகவல்...
ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் ((Esmail Khatib)) கொல்லப்பட்டார்... இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகக்கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்... உருக்குலைந்து கிடக்கும் கட்டடங்கள்.... சேதமடைந்த வாகனங்கள்...
ஈரானின் அணுசக்தி மையம் அருகே தாக்குதல்... யாருக்கும் காயமோ சேதமோ இல்லை என தகவல்... பெருவிபத்து ஆபத்து இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட போரிடும் தரப்புகளுக்கு சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை...
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆஸ்திரேலிய ராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல்... அல் மின்ஹாத் விமானப்படைத் தளம் மீதான வான்வழித் தாக்குதலால் பதற்றம்...
ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவைத் தாக்க அமெரிக்கா திட்டம்... கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டாலரைத் தாண்டக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை...
ஈரானில் இனி நாங்கள் தாக்குவதற்கு ஒன்றுமே இல்லை என ஆணவமாக பதிவிட்ட ட்ரம்ப்... ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்பாத நட்பு நாடுகளுக்கும் கண்டனம்...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதற்கு ரஷ்யா கண்டனம்... பிராந்திய அமைதியைச் சீர்குலைப்பதுடன், நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் எச்சரிக்கை...
அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி உடன் உரையாடும் புதிய வீடியோ... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டார்...
மல்லிகார்ஜுன் கார்கே, சரத் பவார் போன்ற தலைவர்களிடம் இருந்து உத்வேகத்தையும் வழிகாட்டுதல்களையும் பெறவேண்டும்... 59 எம்.பி.க்கள் ஓய்வுபெறும் நிலையில் பிரிவுபசார உரையில் இளம் எம்.பி. க்களுக்கு பிரதமர் அறிவுரை...
காங்கிரசை காதலித்துவிட்டு மோடியை திருமணம் செய்துகொண்டார் தேவகவுடா... பிரிவுபசார உரையில் நகைச்சுவையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே...
மனைவியின் முறையற்ற உறவை நிரூபிக்க, குழந்தைகளை ஒரு கருவியாக கணவர்கள் பயன்படுத்தக் கூடாது... ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
விமானப் பயணிகள் தங்களுக்குப் பிடித்த இருக்கைகளைத் தேர்வு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்... விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்...
அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் தாங்களாகவே முன்வந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும்... பண வெகுமதி மற்றும் இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு...
சர்வதேச பேஸ்பால் கிளாசிக் தொடரில் அமெரிக்க அணியை வீழ்த்திய வெனிசுலா... நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடிக்களித்த வெனிசுலா மக்கள்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான சென்னை அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் சிவம் துபே... வித்தியாசமான முறையில் அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம்...
ஸ்பைடர் மேன் BRAND NEW DAY படத்தின் ட்ரெய்லர் வெளியீடு... ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிப்பு...