2026 ஜனவரி 3 காலைத் தலைப்புச் செய்திகள் web
இந்தியா

HEADLINES | திருப்பரங்குன்றம் வழக்கில் அதிரடி தீர்ப்பு to ஈரானில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம்!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு முதல் ஈரானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் வரை விவரிக்கிறது..

PT WEB

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம்... பிப்ரவரி17இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் சூழலில், தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு...

தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்... சென்னையில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் கணிப்பு...

தென்மேற்கு வங்கக்கடலில் ஜனவரி 6ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... காவிரிப் படுகை, தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிப்பு...

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார், முதல்வர் ஸ்டாலின்... அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திடீர் திருப்பம்...

சென்னைக்கு வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு... விழாவில் எடப்பாடி கே.பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகனுடன் தமிழக அமைச்சர்களும் பங்கேற்பு...

வாக்காளர் பட்டியல்

சூரியன் உதயமாவதும் மறைவதும் யதார்த்தம்தான்... சென்னையில் எம்ஜிஆர் பல்கலைக்கழக விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன் பேச்சு...

ஜனவரி 19ஆம் தேதி தஞ்சை செங்கிப்பட்டியில் திமுகவின் டெல்டா மண்டல மகளிரணி மாநாடு... வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு..

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் பெயர், படம் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்... எம்ஜிஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் எனவும் சாடல்...

தமிழுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவரின் பெயரை மறைக்க முயற்சி என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்ஜிஆர் பெயர், படம் இடம் பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்...

ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக அக்கட்சி எம்பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு... எவ்வித கட்டுப்பாடுமின்றி உட்கட்சி பிரச்சினை தொடர்வதாகவும் வேதனை...

கரூர் எம்.பி ஜோதிமணி

தமிழ்நாடு காங்கிரஸின் சொத்து பாதுகாப்பு உறுப்பினர் சூர்ய பிரகாசம் கட்சியிலிருந்து விலகல்... காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என கூறி செல்வப்பெருந்தகை அவமதித்துள்ளதாக கடும் குற்றச்சாட்டு...

காங்கிரஸ் அழிந்து வரும் கட்சி என்பதற்கு அதன் தமிழக தலைவரே உதாரணம் என அண்ணாமலை விமர்சனம்... டெல்லிக்கும் திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஜால்ரா போடுவதாகவும் கருத்து...

தவெகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜெ.சி. டி.பிரபாகர்... விஜயை நேரில் சந்தித்து கட்சியில் ஐக்கியம்...

எம்ஜிஆரைப் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி விஜயை சந்தித்தபோது ஏற்பட்டது... பொறுப்பு இல்லாவிட்டாலும் மாற்றம் நிகழும் என்பதற்காக இணைந்துள்ளதாக ஜே.சி.டி.பிரபாகர் புதிய தலைமுறைக்கு பேட்டி...

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவருக்குத்தான் கேடு... மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக மூத்ததலைவர் தமிழிசை சவுந்தரராஜன்...

விஜய் - தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரை என்பது ரசிப்பதற்காக தான், ஷாப்பிங் மால் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து... மெரினா கடற்கரையில் உணவு, பொம்மை, பேன்சி கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் இருக்கக் கூடாது என உத்தரவு...

தலைநகர் சென்னையை ஸ்தமிபிக்க வைத்த போராட்டங்கள்... தூய்மைப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரேநாளில் வீதியில் இறங்கி போராட்டம்...

மார்கழி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நிலாவின் வெளிச்சத்தில் கிரிவலம் சென்று சாமி தரிசனம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்... வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த சிதம்பரம்...

22 மின்னணு உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்... 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் அந்நியச் செலாவணி மீதமாவதுடன் வேலைவாய்ப்பும் பெருகும்...

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

மின்னணு துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்.... மத்திய அரசு ஒப்புதளித்த திட்டங்கள் மூலம் தமிழகத்தில் 27 ஆயிரத்து 166 கோடிக்கு முதலீடு என டிஆர்பி ராஜா பதிவு..

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 10 பேர் உயிரிழந்ததற்கு கழிவு நீர் கலந்த குடிநீர்தான் காரணம் என ஆய்வக அறிக்கையில் தகவல்... ஏழைகள் இறப்பின்போதெல்லாம் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக ராகுல் காந்தி விமர்சனம்...

ஜம்மு - காஷ்மீரின் குல்மார்க், பஹல்காம், சோனாமார்க் பகுதிகளில் அதிகரித்த பனிப்பொழிவு... குளிரை ரசித்து விடுமுறையை கொண்டாடி மகிழும் சுற்றுலாப் பயணிகள்...

மெக்சிகோவில் 6.5 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்... கட்டடங்கள் குலுங்கியதால், அச்சத்தில் வீதியில் தஞ்சமடைந்த மக்கள்...

ஈரானின் அரசுக்கு எதிராக தீவிரமெடுக்கும் போராட்டம்... வன்முறையை கையாண்டால் அமெரிக்கா களத்தில் இறங்கும் என ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை...

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என தகவல்... மறுபுறம் விஜயின் கடைசிப் படமான ஜனநாயகனின் ட்ரெய்லர் இன்று வெளியீடு...

விஜய் ஜனநாயகன்

விஜயின் ஜனநாயகன் படத்தின் 4ஆவது பாடல் வெளியீடு... ராவணன் மகன் என்று தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டது படக்குழு...

மீண்டும் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியது ஆபரணத் தங்கம் விலை... ஒரு கிராம் வெள்ளி 4 ரூபாய் உயர்ந்து 260 ரூபாய்க்கு விற்பனை...