ஜனவரி 30ஆம் தேதி காலைத் தலைப்புச் செய்திகள் web
இந்தியா

Headlines | ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை TO சட்டம் ஒழங்கு சீரழிந்துவிட்டதாக விஜய் விமர்சனம்!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை முதல் உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா வரை விவரிக்கிறது..

PT WEB

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்... தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 11 மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்... குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என கணிப்பு...

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும்... மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்....

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கிராமுக்கு ஆயிரத்து 190 ரூபாய் தங்கம் விலை உயர்வு...15 ஆண்டுகளில் தங்கம் விலை 8 மடங்குஅதிகரித்ததால் சாமானிய மக்கள்அதிர்ச்சி...

தங்கத்துடன் போட்டிபோட்டு அதிகரிக்கும் வெள்ளி விலை... கிலோவுக்கு 25ஆயிரம் ரூபாய் உயர்ந்து 4 லட்சத்து 25ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...

தங்கம் விலை நிலவரம்

கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகளை களைய யுஜிசி கொண்டுவந்த புதிய விதிகளுக்கு இடைக்கால தடை... நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைநடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு...

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்... தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு...

ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் வாங்க 20% மானியம் வழங்கப்படும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

திமுக அரசின் திட்டங்களால், பெருமழையை சமாளிக்கும் திறன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது சென்னை மாநகரம்... பெரம்பூரில் 21 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் திருமண மண்டபத்தை திறந்து வைத்து முதல்வர் பேச்சு...

2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை பல தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது திமுக... பத்து தோல்வி பழனிசாமி என்ற முதல்வரின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி பதிலடி

பிளவுப்பட்ட அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை டிடிவி தினகரன் மேற்கொள்ள வேண்டும்... அனைவரும் ஒன்றிணைந்தால் சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் உறுதி...இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம்.... பாஜகவின் ஏ-டீமாக திமுக இருந்து வருவதாக சீமான் விமர்சனம்....

கே.பழனிசாமி, ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்... அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை சுட்டிக்காட்டி பதில்...

விஜய்யை முதல்முறையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி... ஒரு துயரத்தின்போது மக்களை சந்திக்காதவர் என்ன மாதிரியான தலைவர் என கேள்வி...

திமுகதான் டெல்லிக்கு அடிமை... ராகுலை கனிமொழி சந்தித்ததை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

ராகுலை கனிமொழி சந்தித்தது கெஞ்சுவது என்றால், காலில் விழுந்ததை என்னவென்று சொல்வது?... அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் விமர்சனத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பதில்...

சட்டமன்றத் தேர்தலில், பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமனம்... எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட மூத்த தலைவர்களை பொறுப்பாளர்களாக நியமித்த நயினார் நாகேந்திரன்...

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம்.... பாஜகவின் ஏ-டீமாக திமுக இருந்து வருவதாக சீமான் விமர்சனம்....

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னையில் அரசு கல்லூரி வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேருக்கு பிப்ரவரி 12 வரை நீதிமன்றக் காவல்... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சை, மனநல ஆலோசனை வழங்கப்பட்டதாக காவல் துறை விளக்கம்...

சென்னை அரசுக் கல்லூரி வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம்... தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் குற்றச்சாட்டு...

சட்டம் ஒழங்கு சீரழிந்துவிட்டது என்பதற்கு சான்றாக சென்னையில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமைகள்... அடையாறு சம்பவம், நந்தனம் அரசுக் கல்லூரி சம்பவங்களை சுட்டிக்காட்டி விஜய் காட்டமான அறிக்கை...

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தென் தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள்... சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் நில அதிர்வு... கோவில்பட்டி பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் அச்சமடைந்த மக்கள்..

தவெக தலைவர் விஜய்

பத்திரப்பதிவு 3.0 மென்பொருளில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு இடங்களில் பத்திரப்பதிவு சேவை பாதிப்பு.... ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு வரை காத்திருந்த மக்கள்...

2030ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்... தெருநாய்க்கடி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி...

கிருஷ்ணகிரியில் நாய் கடித்து விவசாயி உயிரிழப்பு... தமிழ்நாட்டில் பூதாகரமாகும் தெருநாய் பிரச்சினைக்கு என்ன தீர்வு?...

டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கவலை... பிரச்சினைக்கு தீர்வு காண விரிவான செயல் திட்டத்தை உருவாக்க அரசுக்கு பரிந்துரை...

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதிலளிக்க மத்திய அரசு தயார் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி... நாட்டின் முன்னேற்றத்துக்காக எம். பிக்கள் பாடுபட வேண்டும் என வேண்டுகோள்...

மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சந்திப்பு... தங்களுக்குள் எந்த கருத்துவேற்றுமையும் இல்லை என பேட்டி...

தெரு நாய்கள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு... நேரடி பேச்சுவார்த்தைக்கு வருபவரின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் அளிக்கப்படும் என கிரெம்ளின் மாளிகை அறிவிப்பு...

சீனாவின் பாரம்பரியப் புத்தாண்டான வசந்தகாலத் திருவிழாவை முன்னிட்டு ஒரு மாத கலாச்சார, சுற்றுலா நிகழ்வுகள் தொடக்கம்... நாடு முழுவதும் 30,000 கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பாரம்பரிய விழாக்களுக்கு ஏற்பாடு...

2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு... விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது...

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், சாய் பல்லவி, அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஆகியோருக்கு சிறந்த நடிகை விருது... மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்க்கி ஆகிய படங்களுக்கு சிறந்த திரைப்பட விருது...

லோகேஷ் கனகராஜ், புஷ்கர் காயத்ரி, மாரி செல்வராஜ், ஆர்.பார்த்திபன், சுதா கொங்கரா, தா.செ.ஞானவேல், கெளதம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த சினிமா இயக்குநர் விருது... ஷாம் சி.எஸ்., ஹிப்ஹாப் தமிழா, சந்தோஷ் நாராயணன், தமன், ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது...